புட்டின் உன்னை சும்மா விடமாட்டோம் ISIS கடும் எச்சரிக்கை வீடியோ ரஷ்ய மொழியில் !

புட்டின் உன்னை சும்மா விடமாட்டோம் ISIS கடும் எச்சரிக்கை வீடியோ ரஷ்ய மொழியில் !

ரஷ்ய அதிபர் புட்டினை நாம் சும்மா விடப்போவது இல்லை என்றும், இனித் தான் புனிதப் போர் ஆரம்பம் என்றும் ISIS தீவிரவாதிகள் ஒரு கடும் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள இந்த மிரட்டல் வீடியோ, சமூக வலையத் தளங்களை ஆக்கிரமித்துள்ளது. கடந்த வெள்ளி அன்று, ரஷ்யாவில் நடந்த ஐ.எஸ் தாக்குதலில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைதுசெய்த ரஷ்ய புலனாய்வு , அவர்களை ஈவு இரக்கம் இன்றி கடுமையாக சித்திரவதை செய்து வருகிறது.

அத்தோடு அதனை அவர்கள் வெளி உலகிற்கு காட்ட தயங்கவும் இல்லை. இன் நிலையில் இதனைப் பார்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள் புட்டினுக்கு கடும் மிரட்டலை விடுத்துள்ளார்கள். எமது சகோதரர்களை எந்த அளவு நீ துன்பப்படுத்துகிறாயோ அதற்கு மேலாக 10 மடங்கு துன்பத்தை நீ அனுபவிப்பாய் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இனித் தான் எங்களைப் பற்றி நீ அறியப் போகிறாய் என்றும். புது தாக்குதல்கள் ஆரம்பமாகும் என்று ISIS அமைப்பு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ரஷ்யாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கைதாகியுள்ள 4 பேரும் உக்ரைன் நாட்டு எல்லையில் வைத்தே கைதுசெய்யப்பட்டார்கள் என்பது பெரும் சந்தேகங்களை தேற்றிவித்துள்ளது. ரஷ்யாவுக்குள் ISIS நபர்கள்  நுளைய உக்ரைன் ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதற்கு பின்னால், பின்லேடனை உருவாகிய அமெரிக்க உளவுத் துறை(CIA) இருக்கலாம். எனவே ஒட்டு மொத்தமாக ரஷ்யாவுக்கு ஏழரைச் சனி பிடித்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.