வெற்றி என்ற வார்த்தையை சொல்ல எனக்கு 15 வருடம் ஆகியுள்ளது…

வெற்றி என்ற வார்த்தையை சொல்ல எனக்கு 15 வருடம் ஆகியுள்ளது…

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

அரக்கோணம் பகுதியில் நடக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் சாந்தணு இந்த படத்தை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் இந்த வெற்றி குறித்து நடிகர் ஷாந்தணு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் “மிகவும் எமோஷனலாக உணர்கிறேன். வெற்றி என்ற வார்த்தையை சொல்ல எனக்கு 15 வருடம் நான்கு மாதம் ஆகியுள்ளது. அதாவது 5600 நாட்கள் ஆகியுள்ளன. உங்களின் ஆதரவுதான் என்னை இத்தனை ஆண்டுகளாக ஓடவைத்துள்ளது. இதற்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.