
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலக்கு அமைவாக கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மிக நீண்ட நாட்களாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையத்தில் இருந்து 07 இளம் யுவதிகள் பொலிஸ் மகளிர் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தள்ளதுடன் அவர்களது கருத்துக்கள் அனைவரையும் மிக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது தங்களது ஊரில் போதிய வேலை கிடைக்காத காரணத்தினால் தங்களது குடும்ப வறுமைநிலை காரணமாக தங்களின் கீழ் தங்கி வாழ்வோரை காப்பாற்றுவதற்காக கொழும்பில் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவதாக கூறிவிட்டு இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளதுடன் இதன் மூலமாக ஈட்டும் பணத்தினை தமது குடும்பங்களுக்கு அனுப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.