படையப்பா நீலாம்பரி ரீ-என்ரி ஜெயிலர் படத்தில் ரஜனியுடன் முழுக்க முழுக்க ரம்யாகிருஷ்னன் தான்

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தில், முழு காட்சிகளிலும் ரம்யா கிருஷ்ணன் அவர்களே நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் மோகன்லால், ஜாக்கி சரஃப், மற்றும் தமன்னா போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இருந்தாலும் அவர்களுக்கு காட்சிகள் மிகக் குறைவாகவே உள்ளது.

மோகன் லாலுக்கு வெறும் இரண்டு நாட்களே படப்பிடிப்பு இருந்திருக்கின்றது. ஜாக்கி சரஃப்க்கு, வெறும் மூன்று நாட்களே படப்பிடிப்பு இருந்திருக்கின்றது. இதுபோக தமன்னாவுக்கு வெறும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்திருக்கின்றது

ஆனால் படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு முழு நாட்களுமே படப்பிடிப்பு நடந்த வண்ணம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரே பல காட்சிகளில் தோன்றுகின்றார். அடுத்த நீலாம்பரியாக அவர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஜெயிலர் படம் வெளியான பின்னரே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வரும்