அந்த நேரத்தில் எல்லோரும் என்ன தான் பார்ப்பாங்க…. கூச்சமின்றி கூறிய ஜான்வி கபூர்!

அந்த நேரத்தில் எல்லோரும் என்ன தான் பார்ப்பாங்க…. கூச்சமின்றி கூறிய ஜான்வி கபூர்!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். நல்ல உயரம் நல்ல தோற்றம் கவர்ச்சிகரமான அழகு எபிரபலமான ஹீரோயின் ஆக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே ஜான்வி கபூர் ஃபிகர் பஷீர் என்ற நபரை நீண்ட நாளாக காதலித்து வருகிறார். தனது காதலனுடன் அவ்வப்போது திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது திருமணம் குறித்த பேட்டி ஒன்று கேள்வி கேட்டதற்கு கூச்சமே இல்லாமல் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது, தனது கணவர் எப்படி இருக்க வேண்டும்? திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய பல எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது எனக்கு கூட்டம் அதிகமாகவே இருக்க கூடாது. திருமண கொண்டாட்டங்கள் என்றால் பிடிக்கும் தான் ஆனால் கூட்டத்தை பார்த்தால் எனக்கு ரொம்பவே பயம். அதனால் என்னுடைய திருமணம் ரகசியமான முறையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரின் உறவினர்கள் முன்னிலையில் மட்டுமே நடக்கும்.

அத்துடன் காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து தலை நிறைய மல்லிகை பூ வைத்து நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னுடைய கணவர் வேஷ்டி அணிந்து எனக்கு தாலி கட்ட வேண்டும். அதன் பிறகு விருந்தினருக்கு விருந்து வைக்கும் போது வாழையிலையில் கொடுக்கவேண்டும். இப்படி என் திருமணம் முழுக்க முழுக்க தமிழ் திருமணமாக இருக்க வேண்டும் என ஜான்வி கபூர் தனது விருப்பத்தை கூறி இருக்கிறார். ஜான்வின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இப்படி ஒரு பிட்டு போடுறாரே ஜான்வி கபூர் என ஆளாளுக்கு அவரை ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார்கள்.