தத்தளிக்கும் விஜய் மகன்… ஆபத்திலும் உதவாத அப்பா!

தத்தளிக்கும் விஜய் மகன்… ஆபத்திலும் உதவாத அப்பா!

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதன் அப்டேட் வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்ன என்று தற்போது ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது முன்னணி நடிகர்கள் யாரும் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க விரும்பவே இல்லையாம். அப்படியும் சில பேர் கதை கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். அதற்கான காரணம் என்ன என்று இதில் பார்க்கலாம்.

ஜேசன் சஞ்சய் தன்னுடைய படத்தின் கதையை நடிகர்கள் கவின், துல்கர் சல்மானிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் கதையின் சில விளக்கங்கள் கேட்க அதற்கு பதில் இல்லை என்றும், இயக்கத்தில் பெரிய அனுபவம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜேசன் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் யாரும் முன்வரவில்லையாம்.

மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ஆசைப்பட்டார். பின்னர் அவரும் ஜேசன் பிடியில் இருந்து ஆர் எஸ்கேப் ஆகிவிட்டாராம். மேலும், ஏ ஆர் ரகுமானின் மகன் அமீனை இசையமைக்க ஜேசனுக்கு ஆசையாம். மேலும் ஷங்கரின் இரண்டாம் மகள் அதிதி ஷங்கரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் பிரபல நடிகர்கள் யாரும் ஜேசன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாததால் படம் டேக் ஆஃப் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மகன் இருந்தும் விஜய் உதவ வரவே இல்லையாம்.