ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜெயம் ரவி மனைவி – அசத்தல் போட்டோஸ்!

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜெயம் ரவி மனைவி – அசத்தல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவர் நட்சத்திர குடும்பப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இவரது தந்தை திரைப்பட எடிட்டர், இவரது அண்ணன் திரைப் பட இயக்குனராக இருந்து வந்ததால் இவருக்கு சுலபமாக ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் ஜெயம்ரவி.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நட்சத்திர ஹீரோவாக அந்தஸ்தை பிடித்தார் . இருந்தாலும் இவர் பொதுவெளியில் எந்த பந்தாவும் காட்டாமல் ஹீரோ என்ற ஒரு தலைக்கணமே இல்லாமல் நடந்து கொள்வதால் தான் இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் ரோமியோ ஜூலியட் , பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல் ,நிமிர்ந்து நில், தாம் தூம் ,சம்திங் சம்திங், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கருப்பு நிற சேலையில் செம்ம அழகாக இருக்கும் ஆர்த்தி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அம்புட்டு அழகாக இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.