
ஜோனிடா காந்தி இவர ஒரு இந்திய அளவில் முன்னணி பாடகி ஆக தற்சமயம் வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழ் ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் பின்னணி பாடகி ஆக பாடியுள்ளார். இவர் பாடிய அனைத்து பாடல்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.ஜோனிடா காந்தி 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக பின்னணி பாடகி ஆக அறிமுகம் ஆனார். ஜோனிடா காந்தி தற்சமயம் 50க்கும் மேற்பட்ட நிறைய பாடல்களை பாடியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றுள்ளது. இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். இவரது பெற்றோரும் இவரது அண்ணனும் சிறந்த இசை கலைஞர் ஆக ஒரு காலத்தில் திகழ்ந்து விளங்கினர்.குடும்பமே பாடல்கள், இசை கச்சேரி போன்ற கலை குடும்பம் சார்ந்த குடும்பமாக இருந்தது.
ஜானிடா காந்தி முதன் முதலில் தனது குடும்ப இசை கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடி வந்தார். பிறகு கனடியன் ஐடலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பிறகு தனது திறமையை நிரூபிக்க நிறைய வீடியோக்களை யூடியூப் இளையதளங்களில் பதிவேற்றம் செய்தார்.இந்த வீடியோயோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இவரது புகழ் உலகம் எங்கும் பரவியது.
பிறகு இவருடைய பாடல்கள் அனைத்தும் பிரபலமானதால் திரைப்படத்துறையில் இவருக்கு பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு சோனு நிகாமின் உலக சுற்றுப்பயணத்தில் இவரும் பங்கு கொண்டார். இவர்கள் இணைந்து நிறைய பாடல்களை பாடி இசை புயலை உலகம் எங்கும் பரப்பினர்.இந்நிலையில் இவருக்கு நிறைய இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தற்சமயம் உலக அளவில் முன்னணி இசை அமைப்பாளராக திகழும் ஏ ஆர் ரகுமானின் பாடல்களிலும் இவர் நிறைய பாடியுள்ளார். மற்றும் தமிழில் இசை ஜாம்பவானனா இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்துடன் நிறைய பாடல்களில் பாடி பாடியுள்ளார்.




