ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த கமல் ஆனால் குவியும் பாராட்டுகள்

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது கணவருடன் சேர்ந்து பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அர்ஜூன் நடித்த ‘வானவில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. அதன் பிறகு ’மிடில் கிளாஸ் மாதவன்’ ’சமுத்திரம்’ ’சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அபிராமி, உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ’விருமாண்டி’ என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்..

இந்த நிலையில் நடிகை அபிராமி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நானும் ராகுலும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததன் மூலம் பெற்றோராகியுள்ளோம். கல்கி என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை நாங்கள் கடந்த ஆண்டு தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அது முதல் எங்கள் வாழ்க்கை வித்தியாசமாக மாறி உள்ளது. இன்று அன்னையர் தினத்தில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன். அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை அபிராமி தனது மற்றும் தத்தெடுத்த பெண் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.