கமல் – ஹெச். வினோத் படம் டிராப்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்!

கமல் – ஹெச். வினோத் படம் டிராப்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்!

கமல் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருந்த நிலையில் அந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அந்நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் தக்லைப், அன்பறிவி இயக்கும் கமல் 237 திரைப்படம் மற்றும் சிம்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களை குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஹெச். வினோத் படம் குறித்த அறிவிப்பு இல்லை என்பதால் கமல்ஹாசனின் அடுத்த படத்தை ஹெச். வினோத் இயக்கபோவது இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அந்த படம் ட்ராப் எனவே கருதப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் படத்தை இயக்குவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் காத்திருந்த ஹெச். வினோத் அடுத்த கட்டமாக யோகி பாபு நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அதனை அடுத்து அவர் தனுஷ் மற்றும் கார்த்தி நடிக்க இருக்கும் படங்களை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.