வெறித்தனம் ஓவர்லோட்…. சூர்யாவின் மிரட்டலான “கங்குவா” டீசர் ரிலீஸ்!

வெறித்தனம் ஓவர்லோட்…. சூர்யாவின் மிரட்டலான “கங்குவா” டீசர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவார் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வித்யாசமான கதைகளத்தில் மிக பிரம்மாண்டமாக விசித்திரமாக உருவாக்கிய இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்போதும் இல்லாத அளவிற்கு கொஞ்சம் வித்தியாசமானதாக உள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஸ்டுடியோ க்ரீன், UV கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்த படத்தை சிறுத்தை சிவா வித்தியாசமான கதை கண்ணோட்டத்தில் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் சூர்யா நடித்துள்ள கங்குவார் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகிய பெரும் பரபரப்பாக வைரலாகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் படம் பக்காவாக உருவாகி இருப்பதை இந்த டீசரை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் பிணங்கள், ரத்தம், சண்டை காட்சிகள் என ஆக்ரோஷமான சூர்யாவின் முகம் காட்சிக்கு காட்சி தென்படுகிறது.

அதிரடி போர் சண்டை காட்சிகள் உள்ளிட்ட மொத்த டிஸ்டரும் மிகவும் பிரம்மிக்கத்தக்க வகையில் விறுவிறுப்பாக இந்த டீசர் வெளிவந்திருக்கிறது இதனாலே படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிக அளவில் அதிகரித்துவிட்டது. எனவே இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாகி சூர்யாவின் வித்யாசமான நடிப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார். குறிப்பாக சூர்யா கத்திக்கொண்டு ஆக்ரோஷமாக ஒவ்வொரு வில்லன்களையும் அடித்து துவம்சம் செய்யும் காட்சி மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ: