கார்த்திக்கா அவர் சுத்த வேஸ்ட் ஆனா சத்திய ராஜ் பற்றி சொல்லவே மாட்டேன் குஷ்பு போட்ட குண்டு…

Spread the love

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே திரைப்படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிரபுவுடன் ஜோடி போட்டு இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த எல்லோருடனும் ஜோடி போட்டு குஷ்பு நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே கார்த்திக்குடன் ஜோடி போட்டு நடித்தவர். அந்த படம் ஹிட் என்பதால் கார்த்திக்குடன் சில படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அதேபோல், சத்தியராஜுடனும் குஷ்பு ரிக்ஷா மாமா, நடிகன், மலபார் போலீஸ், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் தன்னுடன் நடித்த நடிகர்களை பற்றி பேசிய குஷ்பு ‘கார்த்திக்கை பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் அவர் ஒரு பெரிய சோம்பேறி. படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். சீரியசான காட்சி எடுக்கும் போது குறும்புத்தனம் செய்து எங்களை கடுப்பேற்றுவார். அவரிடம் பல முறை சண்டை போட்டுள்ளேன். அவர் சுத்த வேஸ்ட்.. என்னை கவர்வதற்கு அவர் எதுவுமே இல்லை’ என ஓப்பனாக பேசினார்.

அதேபோல் சத்தியராஜ் பற்றி பேசிய குஷ்பு ‘சத்தியராஜை பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் எனக்கு தெரியும். ஆனால், அதை இங்கே சொல்ல முடியாது’ என சீக்ரெட் வைத்தார்.