பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ரகசிய திருமணம்? இருந்தாலும் உங்களுக்கு ரசனையே இல்ல!

பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ரகசிய திருமணம்? இருந்தாலும் உங்களுக்கு ரசனையே இல்ல!

தெரிந்து சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடத்து வருகிறார். இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படமே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று நல்ல அறிமுகத்தை கொடுத்ததால் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. தமிழில் முதன்முதலில் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார். அந்த படம் தமிழில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது.

அதை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் தமிழில் குவியத்தொடங்கியது குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து ரெமோ,பாம்பு சட்டை,பைரவா உள்ளிட்ட படங்களில் னைத்து மிகப்பெரிய ரேஞ்சுக்கு உயர்ந்தார். ஆம் டாப் ஹீரோயின் என்ற இடத்தில உட்கார்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மிகவும் பவ்யமான தோற்றத்தோடும் ஹோம்லியான லுக்கில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்திக்கொண்டார் என்று சொல்லலாம். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் கைவசம் தற்போது ரகு தாத்தா, கன்னிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதைத்தாண்டி பாலிவுட்டிலும் என்ட்ரி ஆகும் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகும் முதல் படமே வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை அட்லீ தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்ப்போது கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக கூறி புகைப்படத்துடன் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதாவது, பைரவா படத்தின் பூஜையின் போது இருவரும் கழுத்தில் மாலையுடன் அருகருகே நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை இணையவாசிகள் ஷேர் செய்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறி கிசு கிசு செய்திகள் பரப்பியுள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் சதீஷ் உன் போன் காலில் பேசும் பொது அவரை மாப்பிள்ளை என்று அழைத்தாராம். இதை கேட்டதும் சதீஷுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டுவிட்டதாம். கீர்த்தி சுரேஷின் அம்மாவும் இந்த வதந்தி செய்தியை பற்றி கலாய்க்க தான் சதீஷை அப்படி அழைத்ததாக சதீஷே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.