
நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…..
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா. 2013 ல் “யாத்ரா துடாருன்னு” என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மஹேஷிந்தே பிரதிகாரம், ஒரு முத்தச்சி கட, சர்வோபரி பாலக்காரம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்த அபர்ணா. 2019 ல் ‘சர்வம் தாள மயம்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அதன் பின் 2020 ல் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.
அதன் பின் தீதும் நன்று, வீட்ல விஷேசம், நித்தம் ஒரு வானம், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வவ்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சிம்பிளான சேரியில் அழகாகப் போட்டோஷுட் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


