மன்னர் சார்ளஸ் இறந்துவிட்டார் அறிவித்த ரஷ்ய ஊடகம்- கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பாஸீ !

மன்னர் சார்ளஸ் இறந்துவிட்டார் அறிவித்த ரஷ்ய ஊடகம்- கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பாஸீ !

பிரித்தானிய மன்னர் சார்ளஸ் இறந்து விட்டதாக, பங்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது என்று, ஒரு போலியான ஆவணத்தைக் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளது ரஷ்யா ஊடகம். இதனை அடுத்து பரவலாக ரஷ்யாவில் மன்னர் சார்ளஸ் இறந்து விட்டதாக மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். இன் நிலையில், மன்னர் நலமாக உள்ளார் என்றும், ரஷ்ய செய்தி ஊடகம் பிழையான தகவலை வெளியிட்டுள்ளதோடு, போலியான ஆவணங்களை காட்டி மக்களை திசைதிருப்பியுள்ளது என்றும் பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய மொஸ்கோ நகரில் உள்ள பிரித்தானிய தூதுவர், பல ஊடகங்களை அழைத்து இந்த நேர்காணலை வழங்கியுள்ளார். இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஏன் ரஷ்ய ஊடகங்கள் சில செயல்படுகிறது ? என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.