ஒரே ஒரு ஹாலிடே உங்கள் வாழ்கையை திருப்பிப் போடலாம் முதலையிடம் இருந்து தனது தங்கையை காப்பாற்றிய பெண்ணுக்கு சார்ளஸ் கொடுத்த வீரப் பதக்கம்

ஒரே ஒரு ஹாலிடே உங்கள் வாழ்கையை திருப்பிப் போடலாம் முதலையிடம் இருந்து தனது தங்கையை காப்பாற்றிய பெண்ணுக்கு சார்ளஸ் கொடுத்த வீரப் பதக்கம்

நம்மில் சிலர் ஹாலிடே செல்லும் போது, தெரிந்த இடங்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால் பலர் என்ன செய்கிறார்கள் என்றால், தாம் செல்லும் இடம் பற்றி கொஞ்சம் கூட அறிந்து கொள்ளாமலேயே ஹாலிடே புக் செய்து விடுகிறார்கள். அங்கே பாம்பு இருக்குமா ? முதலை இருக்குமா ? அந்த நாட்டில் கொள்ளையர்கள் அதிகம் இருக்கிறார்களா ? என்று கூட அவர்கள் எந்த ஒரு தகவலையும் முன் கூட்டியே ஆராய்வது இல்லை.

இதுபோல ஜோர்ஜியா என்ற 31 வயதுப் பெண், தனது தங்கையோடு விடுமுறையைக் கழிக்க மெக்ஸிக்கோ சென்றுள்ளார். அங்கே அவர்கள் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டு இருந்தவேளை. அவரது தங்கையை ஒரு ராட்சச முதலை துரத்த ஆரம்பித்துவிட்டது. தனது தங்கையை எப்படி என்றாலும் காப்பாற்றவேண்டும் என்று கருதிய ஜோர்ஜியா, அந்த முதலையை வழி மறித்து அதனுடன் போராடியுள்ளார்.

இதனால் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் சொல்லப் போனால் சில  விரல்கள் துண்டாடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது தங்கையை காப்பாற்றிவிட்டார். ஜேர்ஜியாவுக்கு பிரித்தானிய மன்னர் சார்ளஸ் அவர்கள் மாவீரர் பதக்கம் ஒன்றை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக முதலை ஒரு விலங்கை அல்லது மனிதரைக் கடித்தால், அடுத்த செக்கன் அது 2 வேலை செய்யும். அருகே தண்ணீர் இருந்தால், உடனே தண்ணீரில் முக்கி, எம்மை மூச்சை இழக்கவைக்கும். இது மிகவும் இலகுவான வழி. இல்லையேல் தரை என்றால், உடனே தன் உடலைப் பிரட்டி உருள ஆரம்பிக்கும். அது உருள ஆரம்பிக்கும் போது நாமும் உருளவில்லை என்றால்,

எமது கை அல்லது கால்கள், துண்டாடப்பட்டு விடும். இதனால் ஏற்படும் வலி பொறுக்க முடியாத அளவு இருக்கும். இதன் காரணத்தால் எம்மால் சற்று நேரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும். அந்த நேரமே முதலையின் நேரம். அது அதற்கும் எம் கதையை முடித்து விடும். முதலையின் வீக் பாயின்ட் கண்கள் தான். அதுவே மிக மிக மெதுவான இடம் , முதலை எம்மை கடித்தால், அதன் பிடியில் நாம் சிக்கி இருந்தால். வலியைப் பாராமல் அதன் கண்களை தாக்கினால் போதும். முதலை மீண்டும் வாயை திறக்கும். அதன் பிடியில் இருந்து தப்ப முடியும்.