அரச குடும்பத்தை முற்றாக அழிக்க முற்படுகிறாரா ஹரி ? மன்னர் கடும் முடிவுகளை எட்டக் கூடும்

இந்த செய்தியை பகிர

ஹரி

பெரும் சர்சைக்குரிய நபராக தற்போது கருதப்படுபவர் ஹரி. அவரோடு சேர்ந்து அவரது மனைவி மெகானும் அரச குடும்பத்தை மிகவும் கடுமையாக சாடி வருகிறார்கள். சுமார் 800 வருட பாரம்பரியம் மிக்க, பிரித்தானிய அரச குடும்பத்தை, அடியோடு ஒழிக்க மெகான் முனைப்புக் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சி அரச குடும்பத்தின் மரியாதையை பெரிதும் பங்கப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால்..

மன்னர் சார்ளஸ் கடும் அதிருப்த்தி அடைந்துள்ளார். சில வேளைகளில் அவர் கடுமையான நடவடிக்கையில் இறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் தங்கி இருக்கும் ஹரி மெகான் தம்பதிகளுக்கு இன்று வரை அமெரிக்க அரசு சிறிய அளவில் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. காரணம் அவர்களுக்கு இருக்கும் அரச மரியாதை தான். ஆனால் அந்த அரச மரியாதையை மன்னர் சார்ளஸ் வெகுவிரைவில் களைவார் என்று கூறப்படுகிறது. இதனால் ஹரியை இளவசரர் என்று கூற எவருக்கும் உரிமை இல்லாமல் போகும்.

அத்தோடு மெகானும் இளவரசி என்ற பட்டத்தை இழக்க நேரிடும். இவ்வாறு சில கடுமையான நடவடிக்கையில் சார்ளஸ் இறங்கக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர