கோவாவில் உல்லாசமாய் வாழும் கிரனின் மொத்த சொத்தின் மதிப்பு..

ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பின் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களில் பிசியாக வந்தார். தமிழில் வில்லன், அன்பே சிவம், அரசு, வெற்றி, திவான், தென்னவன் போன்ற பல படங்களை தொடர்ந்து நடித்து வந்தார். அடுத்து தமிழில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெறாமல் ஒரு பாடலில் மட்டும் நடனமாடும் நடிகையாக மாறிவிட்டார்.

அடுத்து இதுவும் இவருக்கு கை கொடுக்காத நிலையில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். அதன் பின் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 பங்கேற்றார். ஆனால் போன வேகத்திலேயே ஏழாவது நாளிலே வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தும் பிரயோஜனம் இல்லை என்கிற மாதிரி இவருடைய சினிமா கேரியரில் வெற்றி பெறவில்லை.

இப்படி இவருடைய மார்க்கெட் குறைந்ததால் கவர்ச்சி நடிகை ஆக மாறினார். அப்படி இருந்தும் இவருக்கு பெருசாக எதுவுமே வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அதன் பின் பல வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த கிரன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அத்துடன் தற்போது இவருடைய சொத்து மதிப்பின் விஷயங்கள் வெளியாயிருக்கிறது.

அதாவது கோவாவில் உல்லாசமாக இருப்பதற்கும், ரிலாக்ஸ் ஆவதற்கும் அடிக்கடி பலரும் போயிட்டு வருவார்கள். ஆனால் கிரண் எப்பொழுதுமே உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் கோவாவில் தனி வில்லா ( Villa) கட்டி வைத்து வாழ்ந்து வருகிறார். ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வைத்து ஆடம்பரமான வாழ்க்கையும் மேற்கொள்கிறார்.

அத்துடன் தனிப்பட்ட ஒரு வெப்சைட் வைத்து அதில் இவருடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட், சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட பொருளுக்கு அம்பாசிடராகவும் இருக்கிறார். இப்படி கைவசம் ஏகப்பட்ட தொழிலை வைத்துக்கொண்டு கோடியில் புரண்டு வருகிறார். மொத்தமாக இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 40 கோடிக்கு மேல் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *