மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில், ஜனாதிபதி மாளிகை ஒன்றைக் கட்டினார் மகிந்தர். பெரிய எடுப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகையில், நீச்சல் தடாகம் முதல்கொண்டு அனைத்து வசதிகளும் இருக்கிறது. இது ஒரு ஆடம்பர மாளிகை. இன் நிலையில் குறித்த ஜனாதிபதி மாளிகை, சில வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அத்தோடு அதனை இலங்கை ராணுவம் பாவித்தும் வந்தது. இது இவ்வாறு இருக்க..
நடிகை ரம்பாவின் கணவர், இந்திரகுமார் பத்மநாதன், இந்த ஜனாதிபதி மாளிகையை 50 வருட குத்தகைக்கு எடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்திரகுமார், கனடாவுக்கு புலம்பெயர்ந்து அங்கே பல வணிக நிறுவனங்களை ஆரம்பித்து தொழில் அதிபர் ஆனார். இவருக்கும் நடிகை ரம்பாவுக்கும் ஏப்பிரல் மாதம் 2010ம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. இதனை அடுத்து ரம்பா டொரண்டோ சென்று, நிலந்தரமாக அங்கேயே தங்கிவிட்டார்.
தற்போது இந்திரகுமார், யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு எடுத்து அங்கே, IT நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனூடாக யாழில் உள்ள மாணவர்கள், பலர் இலவசமாக , கம்பியூட்டர் கல்வியை கற்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரது இந்த நல்ல முயற்ச்சிக்கு உலகத் தமிழர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.