அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை களமே அதிர்ந்து போகப் போகிறது! உச்ச நட்சத்திரம் விஜய்யின் ‘ஜன நாயகன்‘ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி‘ ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு ஷார்ப்பாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழ் சினிமா வட்டாரமே பற்றி எரியும் அளவுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது!
விஜய்க்கு நெருக்கடி! முன்கூட்டியே வருகிறதா பராசக்தி?
விஜய்க்கு நேரடி செக் வைக்கும் விதமாக, ‘பராசக்தி’ திட்டமிட்ட ஜனவரி 14-க்கு முன்னரே, அதாவது ஜனவரி 9ஆம் தேதி அல்லது அதற்கு அருகாமையில் களமிறங்க ரெட் ஜெயன்ட் நிறுவனம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் புகையத் தொடங்கியுள்ளன!
-
இசை வெளியீட்டுப் போரே ஆரம்பம்! ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக, சென்னையிலேயே ‘பராசக்தி’யின் இசை வெளியீட்டு விழாவை நடத்த பக்கா பிளான் ஓடிக் கொண்டிருக்கிறதாம்!
-
துப்பாக்கி கொடுத்தவரிடமே சோதனையா? “துப்பாக்கி கொடுத்தவரிடமே அதை சோதித்துப் பார்க்க போகிறார் சிவகார்த்திகேயன்” என்று சினிமா விமர்சகர்கள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில், இந்த மோதல் பாக்ஸ் ஆபிஸில் ‘ஜன நாயகன் vs பராசக்தி’ என்று தமிழ்நாட்டு அளவில் மட்டுமே உள்ளது!
தளபதிக்கு வைக்கப்பட்ட செக்!
தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி‘ படத்தின் ரீமேக் என்றும், அதில் அரசியல் காட்சிகளை விஜய் புதிதாகச் சேர்த்துள்ளார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
ஆனால், சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தி எதிர்ப்பை மையப்படுத்திய கதையாக சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ வெளியானால், இது விஜய்க்கு பயங்கரமான செக் வைக்கும் என்கிறார்கள் சினிமா வல்லுநர்கள்! இது வெறும் பொழுதுபோக்கு படமாக இல்லாமல், சமூக அரசியல் மையமாக இருந்தால், மோதலின் வீரியம் இன்னும் அதிகரிக்கும்!
சிவகார்த்திகேயனுக்கு சிக்கலா?
ஒருவேளை ‘பராசக்தி’ முன்கூட்டியே, ஜனவரி 9 அல்லது 10-ஆம் தேதி ரிலீஸானால், சிவகார்த்திகேயனுக்குத்தான் சிக்கல் என்றும், அப்போதுதான் விஜய் ரசிகர்களின் பவர் தெரியும் என்றும் தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்!
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பாக்ஸ் ஆபீஸில் ஒரு பெரும் ரகளை நடக்கப் போவது உறுதி! யார் வெற்றி பெறப் போகிறார்கள்? யார் சிதறப் போகிறார்கள்? கலைத்துறையா? அரசியலா? ஜனவரி 9ஆம் தேதி தமிழ் திரையுலகம் ஸ்தம்பிக்கும்!