LADY R3 என்ற மீன் பிடி கப்பலில் கனடா நோக்கி சென்ற தற்கொலைப் பயணிகள் இவர்கள் தான் .. – athirvu news

LADY R3 என்ற மீன் பிடி கப்பலில் கனடா நோக்கி சென்ற தற்கொலைப் பயணிகள் இவர்கள் தான் ..

Lady R 3 என்ற கப்பல். இது வியட்நாமில் இருந்து கனடா நோக்கிச் செல்ல தயாராக இருந்துள்ளது. அதில் சில வியட்நாம் அகதிகள் இருந்துள்ளார்கள். மேலும் 19 பெண்கள் உட்பட 20 குழந்தைகள் இருந்துள்ளார்கள். குறித்த கப்பலில் 303 ஈழத் தமிழர்கள் இருந்துள்ளார்கள். பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் பகுதியில் வைத்து, Lady R3 என்ற இந்தக் கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து கப்பலில் சாட்டலைட் போன் வைத்திருந்த நபர் ஒருவர் தொடர்புகளை மேற்கொண்டு.

அவர் கனடா நாட்டு கடல் படையை தொடர்பு கொண்டு உதவி கோரிய நிலையில். இறுதியாக வியட்நாம் நாட்டுக் கடல் படை புறப்பட்டுச் சென்று அவர்களை மீட்டுள்ளது. மீட்க்கப்பட்ட 303 ஈழத் தமிழர்களையும் தாம் பொறுப்பு ஏற்பதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. இது ஒரு பெரும் திட்டமிட்ட ஏமாற்று வேலை ஆகும். கடந்த 15 வருடங்களாக இது நடைபெற்று வருகிறது. ஆனால் மீடியாக்களில் வெளியானது இல்லை. முன்னர் கனடாவுக்கு சென்ற கப்பலை, உதாரணமாகக் காட்டி, தற்போது ஏமாற்றி வருகிறார்கள்.

இது மிக மிக ஆபத்தான பயணம், தற்கொலைக்கு சமன். காரணம் பசுபிக் கடலை கடந்தே கனடா செல்ல முடியும். உலகிலேயே மிக மிக ஆபத்தான கால நிலை உள்ள கடல் எது என்றால், அது பசுபிக் கடல் பகுதி தான். இன் நிலையில் 303 தமிழர்களிடம் ஆளுக்கு தலா 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாலர்களை வாங்கிய ஏஜன்சி ஒன்று, இறுதியில் தலையில் மிளகாய் அரைத்துள்ளது. இந்தக் கும்பல் சுமார் 6M மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளார்கள். அது போக, 303 பேரின் உயிரை பணயமாக வைத்து, நாடகம் ஆடி காசை சம்பாதித்து , தற்போது தலைமறைவாகி விட்டார்கள்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்