வார இறுதி நாட்களிலும் பிக்கப் ஆகாத லால் சலாம்… மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

வார இறுதி நாட்களிலும் பிக்கப் ஆகாத லால் சலாம்… மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இன்று இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பெரும்பாலான தியேட்டர்களில் ரஜினிகாந்த் படத்திற்கான முதல் நாள் கொண்டாட்டங்கள் சுத்தமாக இல்லை. முக்கிய நகரங்களில் உள்ள பிரதான தியேட்டர்கள் தவிர்த்து பல பகுதிகளில் திரையரங்குகளில் சீட் புக்கிங் முக்கால்வாசி கூட தொடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் வார இறுதியில் லால் சலாம் திரைப்படம் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி என்ற ஒரு சூப்பர் ஸ்டார் இருந்தும் லால் சலாம் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லாததைக் காட்டுகிறது.