இன்னொரு மொழியைக் கற்பது மிகவும் கஷ்டம்… நடிகர் விஜய் ஆண்டனி!

இன்னொரு மொழியைக் கற்பது மிகவும் கஷ்டம்… நடிகர் விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து தொடர்ந்து நடிப்பிலும் இசையிலும் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் ரிலீஸான அவரின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது விஜய் ஆண்டனி ஹிட்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படைவீரன் படத்தின் இயக்குனர் தனா இயக்கி வருகிறார்.ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள விஜய் ஆண்டனி “படத்தின் நாயகி ரியா சுமன் அழகாக தமிழ் பேசுகிறார். எனக்கு இன்னொரு மொழியைக் கற்பது எல்லாம் மிகவும் கஷ்டம். நான் செருப்பு அணியாமல் நடப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை. திடீரென்று செருப்பு போட்டுக்கொள்ள வேண்டுமென்று தோன்றினால் போட்டுக்கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.