சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
தற்பொழுது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இந்த சீரியல் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.
இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கிக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சீரியல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஹரிப்பிரியா இந்த சீரியலை பொருத்தவரை எங்களுக்கு எந்த கருத்தோ..? அல்லது ஆலோசனையோ..? கொடுப்பது கிடையாது.
ஏனென்றால் அதைவிட சிறப்பாக இயக்குனர் திருச்செல்வம் யோசித்து வைத்திருப்பார். வசனங்களாக இருக்கட்டும் காட்சி அமைப்பாக இருக்கட்டும் எதையுமே நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்.
இயக்குனர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிட்டு இருப்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
அந்த அளவுக்கு அந்த சீரியல் கதையுடன் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவ்வளவு சிறப்பாக.. கதை.. எந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும்.. எந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு அழுத்தம் தேவை இதை எல்லாம் கனக்கச்சிதமாக அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவே நாங்கள் எதுவும் புதிதாக அவர்களுக்கு ஆலோசனையும் அல்லது ஏதேனும் மாற்றுக் கருத்து கிடையவே கிடையாது.
அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்வோம். அந்த அளவுக்கு தெளிவாக அவர்களுடைய வேலை இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார்.