தமிழக பாஜக தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல்… மத்திய அரசின் அதி விசேட உத்தரவு!!!

இந்த செய்தியை பகிர

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு இந்திய அரசால் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதற்கமைய ஆயுதமேந்திய 11 CRPF இராணுவ வீரர்கள் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளித்தனர்,

இந்நிலையில் இந்திய உள்த்துறை மத்திய அமைச்சு இவருடைய Y பாதுகாப்பினை நீக்கி விட்டு Z பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதீநவின ஆயுதங்களைக் கொண்ட 6 மத்திய இராணுவப்படை வீரர்கள் அதிவிசேட பாதுகாப்பு இன்று முதல் வழங்கவுள்ளனர். இதனையடுத்து சென்னையில் பாஜக சார்பில் நடைபெறும் சகல கூட்டங்களிலும் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார்.


இந்த செய்தியை பகிர