உடல் எடையைக் குறைத்து கும்முனு போஸ் கொடுக்கும் நம்ப குட்டி குஷ்பூ!…

Spread the love

நடிகை ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…..

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோர்த்வானி. 2003 ல் “ஹவா” என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 5 படங்களுக்கு மேல் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2007 ல் தேசமுருது என்ற படத்தில் தெலுக்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் காந்த்ரி, மஸ்கா, பில்லா, ஜயீபவா, சீதா ராமுலா கல்யாணம், உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் நடித்துள்ளார்.

2011 ல் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” என்ற படத்தின் முலம் தமிழில் அறிமுகமானார். பின் அதே ஆண்டில் ஜெயம் ரவியுடன் “எங்கேயும் காதல்” படத்தில் நாடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழில் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, ஆம்பல, ரோமியோ ஜூலியட், வாலு, போன்ற பல தமிழ் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து சிலிம்மாக இருக்கும் போட்டோவினை பதிவுசெய்துள்ளார்.