கார் ஒன்றில் சக்த்திவாய்ந்த வெடி மருந்தை நிரப்பி, அதனை ரி-மோட் கன்றோலர் மூலம் இயக்கி, ராணுவ நிலையம் மீது மோதி வெடிக்க வைக்க திட்டம் தீட்டிய 3 பேரும் தற்போது விடுதலையாகியுள்ளார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த 3 இளைஞர்களும் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால் தப்பான பாதையில் சென்று, “ஜிகாட்” யுத்தம் என்ற பெயரில், லண்டனில் உள்ள Territorial Army base (ஆர்மி) நிலையத்தை தகர்க்க திட்டம் தீட்டினார்கள் !
உமர், செயாட் மற்றும் ஹுசைன் ஆகிய இந்த 3 இளைஞர்கள், போட்ட திட்டத்தை மோப்பம் பிடித்தது பிரித்தானிய உளவுத்துறை. ஓசை படமால் MI-5 இவர்கள் மூவரையும் 2013ம் ஆண்டு கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியது. அதன் பின்னர் கூட எந்த ஒரு தகவலும் இது தொடர்பாக வெளியாகவில்லை. இப்படி பல தாக்குதல் திட்டங்களை பிரித்தானிய MI-5 பிரிவு முறியடித்துள்ளது. ஆனால் 10 வருடங்கள் 12 வருடங்களுக்குப் பின்னரே அது தெரியவரும். அந்த வகையில் 11 வருட சிறைத் தண்டனை பெற்ற இந்த மூவரும் நேற்றைய தினம் விடுதலையாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.