congestion charge ஏரியாவை பன் மடங்காக அதிகரித்த சாதிக் கான்: ஒரு நாளைக்கு £12.50 ஆக அறிவிப்பு

Spread the love

 

பிரித்தானியாவில் தற்போது மத்திய நகரப் பகுதிக்கு வாகனத்தில் சென்றால், ஒரு நாளைக்கு 12 பவுண்டுகளை கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மத்திய நகரப் பகுதிக்கு பல ஆயிரம் வாகனங்கள் வந்து செல்வதால், வாகன நெரிசல் மற்றும் காற்று மாசு படுவதாக கூறியே முதலில் இந்த கட்டணத்தை வசூலித்தார்கள். ஆனால் தற்போது இது மிகப் பெரிய வியாபாரம் ஆகி, லண்டன் கவுன்சிலுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் உக்தியாக மாறிவிட்டது. தற்போது,

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், முன்னர் ஒரு சிறிய இடத்திற்குள் சென்றால் காசை வசூலித்தார்கள். தற்போது அந்த சிறிய இடத்தை பெரும் இடமாக மாற்றி இருக்கிறார்கள். மேலும் பல நகரங்களைச் சேர்த்து. குறிப்பிட்ட இடத்தினுள் வந்தால் 12 பவுண்டுகளை கட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வருகிறார்கள். இது வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வர உள்ளது. இதனூடாக சுமார் 2 லட்சம் வாகன ஓட்டுனர்கள் ஒரு நாளைக்கு 12 பவுண்டுகளை கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இப்படி ஏரியாவை பெரிதாக்கிக் கொண்டு சென்றால் இறுதியில் மக்கள் வாழும் சாதாரண நகரங்களில் கூட செல்ல 12 பவுண்டுகளை கட்டவேண்டி இருக்கும் போல உள்ளதே ? இவர்களின் பண ஆசைக்கு அளவே இல்லையா ?