நாடு இருக்கும் சூழலைப் பார்க்கும்போது – பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீர்த்தி பாண்டியன்!

நாடு இருக்கும் சூழலைப் பார்க்கும்போது – பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீர்த்தி பாண்டியன்!

ஜனவரி 25 ஆம் தேதி பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

அப்போது படத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பேசும்போது “2022 ஆம் ஆண்டு இந்த படம் தொடங்கியது. இயக்குனர் கதை சொன்னதும் எனக்குப் பிடித்ததால் நடித்தேன். பா ரஞ்சித் படத்தைத் தயாரிக்கிறார் என்றதுமே எல்லோரும் என்ன அரசியல் பேச வந்துவிட்டீர்களா எனக் கேட்டனர். அரசியல் பேசினால் என்ன தவறு. நம் வாழ்க்கையில் அரசியல் உள்ளது. நாம் பேசாமல் இருப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

எல்லா படங்களிலும் அரசியல் இருக்கிறது. பா ரஞ்சித் பேசும் விஷயங்கள் முக்கியமானவை. நாடு இருக்கிற சூழலைப் பார்க்கும்போது அறிவு எழுதிய பாடலான “காலு மேல காலு போடு ராவண குலமே” என்று பாட தோன்றுகிறது” என பேசியுள்ளார்.