ஒரு தோல்விக்குப் பிறகு நிறைய அன்பு கிடைத்தது… லால் சிங் சத்தா குறித்து அமீர்கான் ஓபன் டாக்!

ஒரு தோல்விக்குப் பிறகு நிறைய அன்பு கிடைத்தது… லால் சிங் சத்தா குறித்து அமீர்கான் ஓபன் டாக்!

சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்த தோல்வியின் காரணமாக அமீர்கான் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டார். அவரின் தாயாரின் சிகிச்சைக்காக கடந்த சில மாதங்கள் அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

இதையடுத்து இப்போது அவர் தன்னுடைய அடுத்தபடத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய கடைசி பட தோல்வி குறித்து பேசியுள்ள அமீர்கான் “லால் சிங் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். ஆனால் படம் தோல்வி அடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது படம் சரியாகப் போகாததால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அக்கறையோடு என்னை விசாரித்தார்கள். நான் செய்த தவறுகளை எல்லாம் சரிசெய்துகொள்ள இந்த தோல்வி வாய்ப்பளித்தது. அந்த படத்தில் நான் பல தவறுகளை செய்துள்ளேன். ஆனால் எல்லா தவறுகளையும் ஒரே படத்தில் செய்ததற்கு கடவுளுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.