வாழ்க்கை பிச்சை போட்ட சிவகார்த்திகேயன்… மஜாவா வாழும் மாகாபா ஆனந்த்!

வாழ்க்கை பிச்சை போட்ட சிவகார்த்திகேயன்… மஜாவா வாழும் மாகாபா ஆனந்த்!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் மாகாபா ஆனந்த். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் விட்டு சென்ற இடத்தை தான் தற்போது பூர்த்தி செய்து வருகிறார். ஆம், “அது இது எது” நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவருக்கு ஹீரோவாக திரைப்பட வாய்ப்பு கிடைக்க தனது ஆங்கர் பனியின் வெற்றிடத்தை மாகாபா ஆனந்திற்கு விட்டு சென்றார்.

அந்த இடத்தை மாகாபா ஆனந்த் சரியாக பூர்த்தி செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மிகச்சிறந்த தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரும் விஜய் டிவி பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அது அவ்வளவாக பெரிதாக பேசப்படவில்லை. இதனால் அந்த பக்கமே நம்ம இனிமேல் தலை காட்ட வேண்டாம் என ஒதுங்கி விட்டு தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இவர் சூசன் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்போது விஜய் டிவியில் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்கவைத்துள்ளது. ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் மாகாபாவின் முழு சொத்து மதிப்பு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.