எல்லாரும் விட்டு போய்ட்டாங்க… மரண வேதனையில் மனிஷா கொய்ராலா!

எல்லாரும் விட்டு போய்ட்டாங்க… மரண வேதனையில் மனிஷா கொய்ராலா!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தில் பிறந்த வளர்ந்த இந்திய நடிகையான இவர் பல்வேறு ஹிந்தி திரைப்படங்களின் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.

பிறப்பிலிருந்து பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவரான மனிஷா கொய்ராலா தமிழ் திரைப்படங்களில் பல வெற்றி படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்களாக பார்க்கப்படுவது முதல்வன், பம்பாய், இந்தியன் உள்ளிட்ட படங்கள்.

இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து மிகப்பெரிய நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு அவரது அவரை உயர்த்தியது. இதனிடையே நட்சத்திர நடிகராக இருந்து வந்த போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனுஷா கொய்ராலா அதன் சிகிச்சைக்காக மிகவும் துயரப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து குணமாகி வந்திருக்கிறார்.

உடல் குணமானதற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார் .தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரமண்டி என்ற வெப் தொடரில் இவர் கமிட் ஆகி நடித்த வருகிறார். இந்நிலையில் இதன் பிரமோஷன் விழாவில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மனுஷா கொய்ராலா தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மெலிந்து போனபோது தன்னுடன் இருந்த உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் எல்லாருமே என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.

அது நோயை காட்டிலும் மிகவும் கொடிய வேதனை எனக்கு கொடுத்தது என கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரிகள் மனைவி இவர்கள் மட்டும் தான் என்னுடன் இருந்து என்னை அரவணைத்து பார்த்துக்கொண்டனர்.என்னுடைய உறவுக்காரர்களை பலபேர் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் ஆறுதலாகவோ எனக்கு உதவிக்காகவோ யாரும் வந்து நிற்கவே இல்லை. நோய் பாதிப்பில் இருந்து இப்போது குணமாகி திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முற்றிலுமாக நான் குணமாகவில்லை. என்னால் முன்பை போல இப்போது வேலை செய்ய முடியவில்லை. நான் மன அழுத்தத்தோடு தான் நான் வேலை செய்து வருகிறேன் என மிகவும் இறுக்கமாக பேசினார் மனிஷா கொய்ராலா.