தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த மணிவண்ணன் திடீரென உயிரிழந்தார். அவர் இறப்புக்கு குடி தான் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லையாம். வேறு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கிழக்கே போகும் ரயில் படத்தினை பார்த்து நடிப்புலகில் ஈர்க்கப்பட்டவர் மணிவண்ணன். அதன் பின்னர் பாரதிராஜாவின் உதவியாளராக இணைந்தார். நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம் படங்களில் கதை வசனம் எழுதினார்.
அதன் பின்னர் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக வெற்றி படத்தினை கொடுத்தார். அவர் கோலிவுட்டில் இயக்கிய 50 படங்களில் 34 திரைப்படங்கள் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இயக்குனராக இல்லாமல் நடிகராகவே பிரபலமடைந்தார்.
பல படங்களில் நடித்த மணிவண்ணனின் அமைதிப்படை அரசியல்வாதி மணிமாறனை யாருமே மறந்து இருக்க முடியாது. அவரும் சத்யராஜும் இணைந்து நடித்த அந்த காட்சி இன்று வரை ரசிகர்களிடம் ட்ரெண்ட் லிஸ்ட்டில் தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட மணிவண்ணன் 2013ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். அவர் இறப்புக்கு குடிப்பழக்கம் தான் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் சகோதரி மணிவண்ணன் இறப்புக்கு குடி காரணமே இல்லை. அந்த பழக்கத்தினை அவர் விட்டு விட்டார். அவர் இறப்புக்கு அவருக்கு இருந்த புற்றுநோயே காரணம் எனக் கூறி இருக்கிறார்.