பா ரஞ்சித் படத்தில் இணைந்த மஞ்ஞும்மள் பாய்ஸ் நடிகர்!

பா ரஞ்சித் படத்தில் இணைந்த மஞ்ஞும்மள் பாய்ஸ் நடிகர்!

பா ரஞ்சித் தன்னுடைய நீலம் ஸ்டுடியோஸ் மூலமாக தொடர்ந்து பல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வருகிறார். அதில் பல அறிமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஜெ பேபி திரைப்படத்துக்குப் பிறகு தன்னுடைய உதவி இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பசுபதி மற்றும் லிங்கேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இவர் சமீபத்தில் ரிலீஸாகி பெருவெற்றி பெற்ற மலையாள படமான மஞ்ஞும்மள் பாய்ஸ் படத்தின் மூலம் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.