ஷூட்டிங்குக்கு தயாரான மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் படக்குழு!

ஷூட்டிங்குக்கு தயாரான மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் படக்குழு!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் கபடி வீரர் ஒருவரின் பயோபிக்காக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக துருவ் விக்ரம் கபடி பயிற்சிகளை மேற்கொண்டார்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இடையில் மாரி செல்வராஜ் மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களில் கமிட்டானதால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. படத்தில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோ மற்றும் அப்லாஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரத்தில் தென் தமிழகத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.