காதல் தகராறு காரணமாக நேற்று (17) கொழும்பு குதிரைப்பந்தய திடலில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவியின் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் களனி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் இளங்கலை மாணவர். நேற்று நண்பகல் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். காதலியை கொலை செய்ய பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் புத்தகப் பை என்பன அவரது வீட்டில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய மாணவியே காதலனால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்