கொழும்பில் மருத்துவபீட மாணவி சடலமாக மீட்ப்பு……. விசாரணையின் பின் பொலிஸார் தெரிவித்தது என்ன!!!

இந்த செய்தியை பகிர

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் பல்கலைக்கழக யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்க்கப்பட்டதுடன் இதற்கான காரணத்தினைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையினை மேற்கொண்டனர். இதற்கமைய அருகில் உள்ள CCTV கமெராவில் பதிவாகிய சாட்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த யுவதியின் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அதாவது கொழும்பு பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையில் 03 ஆண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவனும் மானவியும் காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் திடீரெனத் தன்னுடனான உறவினை நிறுத்துமாறு காதலனிடம் தெரிவித்துள்ளார் குறித்த யுவதி, இந்நிலையில் நேற்று விரிவுரை முடிந்தவுடன் இதுபற்றிப் பேசுவதற்கு வருமாறு குறித்த இளைஞர் கேட்டதற்கு அமைய இருவரும் குதிரைப் பந்தய திடலுக்கு சென்றிருந்தனர், இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த காதலன் தன்னிடம் இருந்த கத்தியினை எடுத்துக் காதலியைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன், குறித்த யுவதி தற்போது வேறு ஒருவரை காதலிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை பகிர