ஞாயிறு அன்று லண்டனை தாக்கவுள்ள 6 இஞ்ச் பணி பொலிசார் விடுக்கும் அவசர அறிவிப்பு

இந்த செய்தியை பகிர

பிரித்தானிய பொலிசார் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். நாளைய தினம் ஞாயிறு அண்று கடும் மழை முதலில் ஆரம்பித்து பின்னர் போகப் போக அதுவே கடும் பனிப் பொழிவாக மாறும் என்றும். சுமார் 6 அங்குலத்திற்கு பணி பொழிவு வர வாய்ப்பு உள்ளது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே மத்திய லண்டன் பகுதியில் ரவல்கர் சதுக்கத்தில் உள்ள தண்ணீர் தாங்கி இறுகி கட்டியாகிவிட்டது.

இன் நிலையில் ஞாயிறு அன்று -6 தொடக்கம் -8 வரை குளிர் செல்லக் கூடும் என்று கூறப்படுகிறது. வட துருவத்தில் ஏற்பட்ட பெரும் பனிப் புயல் ஒன்று ஞாயிறு அன்று பிரித்தானியாவைக் கடந்து செல்கிறது. இதுவே திடீர் குளிருக்கு காரணம். எனவே தமிழர்களே மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வாகனங்களை தேவையில்லாமல் ஓட்டிச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.


இந்த செய்தியை பகிர