மணிக்கு 90 மைல் வேகத்தில் கடும் புயல் காற்றுடன் கூடிய மழை, பிரிட்டனை தாக்க உள்ளது என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள் மெற்றோ பொலிடன் பொலிசார். சுமார் 2 தொடக்கம் 2.5 அங்குல மழை கொட்டக் கூடும் என்றும், மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசும் எனவும் வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, வரும் வியாழன் அன்று, அவசியம் இல்லாமல் வெளியே காரில் செல்லவேண்டாம் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேலும் வீட்டின் கூரைகள், இதனால் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது. எனவே வீட்டுக்கு இன்சூரன்ஸ் போடவில்லையா தமிழர்களே… போட்டுக் கொள்ளவும். காரணம் இந்த “சையரான்” (CIARAN)புயல் பயங்கரமாக இருக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது. உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளவும்.