ராணுவத்தினரை அம்பூலன்ஸ் ஓட்டுனராக களம் இறக்கிய ரிஷி சுண்ணக்- தடுமாறும் பிரித்தானியா

இந்த செய்தியை பகிர

பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தாதிகள் மற்றும் அம்பூலன்ஸ் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். இன் நிலையில் அவரச சேவைப் பிரிவே ஸ்தம்பித்த நிலை தோன்றியுள்ளது. இதனை சமாளிக்க ராணுவத்தை களம் இறக்கி உள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக். நாடு தற்போது உள்ள நிலையில் சம்பள உயர்வு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ரிஷி. மேலும்…

வெளிநாடுகளில் இருந்து பல நூறு தாதிமார்களை பிரித்தானியாவுக்கு வேலைக்கு எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. பிரித்தானியாவில் தென் மேற்கு பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒரு சில அம்பூலன்ஸ் மட்டுமே சேவையில் உள்ளது. இதனால் குறித்த பகுதிக்கு மேலதிக ராணுவத்தை அனுப்பி உள்ளது அரசு. இது இவ்வாறு இருக்க..

தமது உறவுகளை சொந்த வாகனத்தில் ஏற்றி A&E க்கு கொண்டு செல்கிறார்கள் மக்கள். அம்பூலன்ஸ்சுக்கு காத்து இருப்பது என்பது நடக்காத காரியம் என்பதனை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.


இந்த செய்தியை பகிர