
சென்னை கடற்கரை அருகில் உள்ள கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துப் பணிகளை நினைவுகூரும் முகமாகத் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 81 கோடி ரூபா மதிப்பில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்குப் பல்வேறு எதிர்க் கட்சிகள் தொடர்ந்தும் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் இதற்குத் தனது அதிரடியான எதிர்ப்பினைத் தெரிவித்தார் தேமுதிக தலைவர் விஜயக்காந்தின் மகன், அதாவது திமுக அமைப்பினர் அவர்களுடைய அறக்கடடளை நிதியினைக் கொணடு பேனா நினைவுச்சின்னம் வைக்கட்டும் ஆனால் மக்களுடைய வரிப்பணத்தினைக் கொண்டு நினைவுச்சின்னம் அமைப்பது தவறான செயற்பாடு எனவும், மக்களுக்கு இன்னும் அதிகவிலான திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.