படம் பிளாப் ஆனதால் முருகதாஸ் போட்ட பக்கா பிளான் மீண்டும் மதுவை கைக்குள் எடுத்தார் !

படம் பிளாப் ஆனதால் முருகதாஸ் போட்ட பக்கா பிளான் மீண்டும் மதுவை கைக்குள் எடுத்தார் !

அயோத்தியா என்ற தரமான படத்தை எடுத்தவர், தயாரிப்பாளர் மது. பின்னர் ஸ்பைடன் என்ற படத்தை எடுத்தார். இயக்குனராக முருகதாசை போட்டார். ஆனால் அந்தப் படம் சூப்பர் பிளாப் என்பது ஊர் அறிந்த விடையம். இதனால் பெரும் நஷ்டமடைந்த மது சினிமா துறையில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால் தற்போது முருகதாஸ், சிவகார்திகேயனை அணுகி ஒரு கதை சொல்ல. அது பிடித்துப் போய் சிவகார்த்திகேயனும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அப்படி என்றால் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி வரும்போது. தன்னால் நஷ்டம் அடைந்த மதுவின் ஞாபகம் முருகதாசுக்கு வந்துள்ளது. உடனே முருகதாஸ் மதுவை அணுகி நான் எடுக்கும் இந்தப் படத்தை நீங்கள் தாரிக்கவேண்டும். எனது சம்பளத்தையும் நான் குறைத்துக் கொள்கிறேன். நிச்சயம் இந்தப் படம் வெற்றியடையும். இதனால் நிச்சயம் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

முருகதாசின் இந்த வேண்டுகோளை ஏற்ற மது, படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படப்பிடிப்பு ஆரம்பமாகி மாதக் கணக்கு ஆகிறது. பெரும் பரபரப்பாக நடந்து வரும் இந்தப் படத்தின் பெயரை மட்டும் முருகதாஸ் இன்றுவரை அறிவிக்கவில்லை.