”மியூசிக் கற்றுக் கொடுத்தது என் அக்காதான்”

”மியூசிக் கற்றுக் கொடுத்தது என் அக்காதான்”

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சிறுநீரக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காலமானார்.

அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, சினிமாத்துறையினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அதன்பின்னர், இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பவதாரணியின் இறப்பு, இளையராஜாவின் குடும்பத்தினர் மற்றும் சினிமாத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் அக்கா பவதாரணி பற்றி யுவன்சங்கர் ராஜா மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ”சின்ன வயசுல என் கையப்பிடிச்சு பியானாவில் வச்சு உன்னால வசிக்க முடியும் நீ வாசி! என்று என்னை ஊக்கப்படுத்தியது என் அக்காதான். என்னை வற்புறுத்தி அவருடைய பியானோ க்ளாஷூக்கு அழைத்துப் போய் மியூசிக் கற்றுக் கொடுத்தார். என் இசைவாழ்வில் மட்டுமல்ல… தனிப்பட்ட வாழ்விலுமே அவர்கள் எனக்கு ரொம்ப முக்கியமானவர்” என்று தெரிவித்துள்ளார்.