என் மகனுக்கு இந்த உணவு என்றால் பிடிக்கும் ஷோபா சொன்ன தகவல் இவை தான்…

Spread the love

அன்னையர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பலருமே தங்கள் விருப்பமானவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கொஞ்சம் வித்தியாசமாக ஷோபா சந்திரசேகர் தனது மகனான் விஜய்க்கு என்ன பிடிக்கும் உள்ளிட்ட சில சுவாரஸ்யமான தகவல்களை பகிந்துள்ளார்.

இளையதளபதி விஜய்: கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வரும் இவருக்கும் தமிழ்நாடு கடந்து இந்தியா ஏன் உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். என்னதான் இவர் இன்று வெற்றியின் உச்சியில் இருந்தாலும் ஆரம்பகாலத்தில் இவருக்கு பக்கபலமாக இருந்தது இவரது தந்தை எஸ்ஏசி-தான். ஆனால் சிலபல காரணத்தால் இவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல் சில காலமாக பரவி வருகிறது. அதே சமயம் தாய் ஷோபாவின் மீது தனி பாசம் எப்போது விஜய்க்கு உண்டு.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் மகன் விஜய் குறித்து சில சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஷோபா, “ விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு தோசைதான், அதுதான் அவரது ஃபிட்னஸ் சீக்ரெட்டும் கூட காலையில் இரண்டு தோசை, இரவு இரண்டு தோசை அதனுடன் ஒர்க்கவுட் இவைதான் அவரது ஃபிட்னஸ்க்கு முக்கிய காரணம்” என விஜய் குறித்த தகவலை பகிந்துள்ளார்.