
ஒரு குறிப்பிட்ட இளைஞர் குழு கடந்த சில மாதங்களாக கிளிநொச்சி நகரில் இரவுநேரங்களில் அட்டுழியங்களை செய்து வந்தனர், அதாவது வீடுகளில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிடல், மோட்டார் சைக்கிலை திருடுதல் மற்றும் வாள்வெட்டு போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் காணப்பட்டனர்.
இதனையடுத்து, பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 06 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வாள்கள், கூரிய ஆயுதங்கள், திருடப்பட்ட மோட்டார் சைக்கில்கள் மற்றும் நகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புட்ட நபர்களை பொலிஸார் தேடி வருவதுடன் இவ்வாறு கைதாகியவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.