குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா – நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா – நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா கேரளாவை பூர்வீகமாக கொண்டு அங்கேயே பிறந்த வளர்ந்து மலையாள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக பணியாற்றி அதன் பிறகு திரைப்படத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்தின் ஜோடியாக நடித்தார் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து சில காலம் பிரேக் விட்டிருந்தவர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் பல வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது நயன்தாரா குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோக்களை வெளியிட்டு அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் . இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.