கணவரை பிரிந்த நயன்தாரா விக்கி – நயனுக்கு விரைவில் விவாகரத்தா?

கணவரை பிரிந்த நயன்தாரா விக்கி – நயனுக்கு விரைவில் விவாகரத்தா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு இரட்டை மகன்கள் பிறந்துள்ளனர். வாடகை தாய் முறையில் இரட்டை ஆன் குழந்தைகளை பெற்றெடுத்தார். உயிர் உலக் என இரண்டு குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட க்யூட்டான சில போட்டோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் நயன்தாரா தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இடையில் மிகப்பெரிய சண்டை வெடித்துள்ளதாம். அதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. காரணம் இதற்கு காரணம் என்னவெனில் நயன்தாரா விக்னேஷ் சிவனை தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அன் பாலோ செய்துவிட்டார் என்றும் இதுதான் பிரிவுக்கு காரணம் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால்,அதில் உண்மை இல்லை சில டெக்னிகல் பிரச்சனையால் சிலருடைய ஃபாலோயர்களின் பெயர்கள் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது மீண்டும் ஃபாலோயர்களின் பட்டியலில் வெற்றியின் பெயர் நயன்தாராவிடம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் நெட்டிசன்களுக்கு மத்தியில் நயன்தாராவின் இந்த விவாகரத்து பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்த குழப்பமான பதிவு தற்போது நயன்தாரா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தெளிவுபடுத்த நயன்தாரா ஸ்டோரீஸில் தனது மகனை கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு க்யூட்டான போட்டோவை வெளியிட்டு நான் தோற்று விட்டேன் என பதிவிட்டிருக்கிறார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.