குழந்தைகளோடு ஷூட்டிங் வரும் நயன்தாரா… எக்ஸ்ட்ரா செலவால் கையைப் பிசையும் தயாரிப்பாளர்!

குழந்தைகளோடு ஷூட்டிங் வரும் நயன்தாரா… எக்ஸ்ட்ரா செலவால் கையைப் பிசையும் தயாரிப்பாளர்!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் கதைக்களம் ஊட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்டது. ஆனால் நயன்தாரா ஊட்டிக்கு வர முடியாது என சொல்லிவிட்டதால் சென்னையிலேயே ஊட்டி போல செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஷூட்டிங்குக்கு தனது இரு மகன்களோடு வரும் நயன்தாரா, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள கூடவே ஐந்து பெண்களையும் அழைத்து வருகிறாராம். அவர்களுக்கு தினசம்பளமும் படத் தயாரிப்பாளர்தான் கொடுக்கவேண்டி வருகிறதாம். இதனால் நயன்தாரா மேல் அதிருப்தியில் உள்ளனராம் தயாரிப்புத் தரப்பினர்.