உங்க வயசு என்ன அவர் வயசு என்ன? 72 வயசு நடிகருடன் நயன்தாரா செய்யப்போகும் சம்பவம்!

உங்க வயசு என்ன அவர் வயசு என்ன? 72 வயசு நடிகருடன் நயன்தாரா செய்யப்போகும் சம்பவம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பார்க்கப்படும் நடிகை நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற பிறகு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த வருகிறார். ஹிந்தியில் மிகப்பெரிய ஸ்டார் நடிகரான ஷாருக்கான ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் நயன்தாரா தற்போது பிரபல நடிகராகவும் மூத்த நடிகர் ஆகவும் அதாவது கிட்டத்தட்ட 72 வயது மதிக்கத்தக்க நடிகர் ஒருவருக்கு ஜோடியாக கமிட் ஆகியிருக்கிறாராம்.

ஆம் மலையாளத்தில் ஸ்டார் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டிக்கு ஜோடியாக நயன்தாரா புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது. இந்த படத்தை ரொமான்டிக் படங்களுக்கு பெயர் போன இயக்குனரான கௌதம் மேனன் தான் இயக்குகிறார். இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா நடித்ததே கிடையாது. ஒருவேளை இந்த படம் மட்டும் உறுதியாக விட்டால் கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப் போகும் முதல் படமாக இதுவாகத்தான் அமையும். நயன்தாரா ஏற்கனவே மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல், வாசுகி மற்றும் ராப்பகல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.