ஜெயிலர் 2 திரைக்கதை பணியில் நெல்சன்… கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

ஜெயிலர் 2 திரைக்கதை பணியில் நெல்சன்… கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

இந்த வெற்றி நீண்டகாலமாக தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு அவர் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கு ஜெயிலர் 2 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 என தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் முந்தைய பாகத்துக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது என சொல்லப்படுகிறது. முந்தைய பாகத்தில் நடித்தவர்கள் யாரும் இந்த படத்தில் இருக்க மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. தற்போது நெல்சன் அந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.